2 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்திய பெண்கள்; போலீசார் நடவடிக்கை!

Girl's private parts injured for wetting bed in kerala

படுக்கையில் சிறுநீர் கழித்தற்காக 2 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் அரசு நடத்தும் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இரண்டரை வயது குழந்தை ஒன்று படுக்கையில் சிறுநீர் கழித்ததால், அந்த குழந்தையின் குழந்தையின் பிறப்புறுப்பில், பராமரிப்பாளர்கள் 3 பேர் கிள்ளியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், குழந்தையின் பிறப்புறுப்பில் விரல் நகங்களின் காயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மூன்றுபராமரிப்பாளர்களான அஜிதா, மகேஸ்வர் மற்றும் சிந்து ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழுவின் பொதுச் செயலாளர் அருண் கோபி கூறுகையில், “சம்பவம் நடந்த வாரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பெற்றோர் இறந்துவிட்டதால், சிறுமியும் அவரது தங்கையும் அந்த இடத்தில் தங்கியுள்ளனர்” என்று கூறினார்.

incident Kerala police
இதையும் படியுங்கள்
Subscribe