ஒரு ஆணிடம் ஆசையாக பேசி அவரை 6பெண்கள் சேர்ந்து பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, டெல்லியை சேர்ந்த ஒரு நபர் கடந்த மூன்று மாதங்களாக பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். இருவரும் தொடர்நது பேசி நெருக்கத்தை அதிகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த நபரை அந்த பெண் தனி இடத்தில சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். அவரும் ஆசையாக அந்த பெண்ணை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஒரு தனி இடத்திற்கு அந்த நபரை அந்த பெண் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த வீட்டுக்குள் மேலும் சில ஆண்களும், சில பெண்களும் இருந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

girls

Advertisment

பின்பு அவர்கள் அந்த நபரை மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அந்த விடியோவை வெளியிட கூடாது என்றால் 30 இலட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். பின்பு பயந்து போன அந்த நபர் 10இலட்சம் தான் என்னால் தர முடியும் என்று கூறியுள்ளார். அதன் பின்பு பணத்தை வீட்டிலிருந்து எடுத்து வருவதாக கூறி அங்க இருந்து தப்பித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி ரோகிணி செக்டார் பகுதி போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார், இதுதொடர்பாக 6 பெண்களை கைது செய்துள்ளனர்.