girlfriend who attacked her cheating boyfriend

Advertisment

பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் துணை ராணுவப் படை வீரர் சூர்யபூஷண் குமார். இவரும், நேஹா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேஹா தன்னை திருமணம் செய்துகொள்ள சூர்யபூஷணைவற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து காதலியின் வற்புறுத்தலைத் தொடர்ந்து பாட்னா வந்த சூர்யபூஷண், நேஹாவை பதிவு திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தை முடித்த கையோடு, இருவரும் அங்கே உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் சூர்யபூஷண், தனக்கு பெற்றோர்கள் திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர் என நேஹாவிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேஹா, நமக்கு நடந்த பதிவு திருமணம் குறித்து வீட்டில் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இதனை சூர்யபூஷண் காதில் வாங்கிக் கொள்ளாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக என்னை ஏமாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார் நேஹா. ஆனால் இதற்கெல்லாம் சூர்யபூஷண் பிடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த நேஹா, தான் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து சூர்யபூஷண் ஆண் உறுப்பில் குத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த சூர்யபூஷண் நடந்தவற்றை விடுதி ஊழியர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்தபுகாரின்அடிப்படியில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.