/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/507_4.jpg)
டெல்லியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தாயை சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சுபாஷ் மோஹால் பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா. 50 வயதான அவர் அதே பகுதியில் சிறிய அளவில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று குர்ஷிதா நடத்தும் கடைக்கு வந்த 16வயது சிறுமி ஒருவர், தன் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் குர்ஷிதாவைச் சுட்டுள்ளார். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுமியைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதே சமயம் குர்ஷிதாவை மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதையடுத்துஇச்சம்பவம்குறித்தகாவல்துறையினரின் விசாரணையில், குர்ஷிதாவின் 25 வயது மகன் அந்த 16 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், தற்போது அந்த இளைஞர் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில்தான்சம்பவம் நிகழ்ந்து இரு ஆண்டுகள் கழித்து இளைஞரின் தாயாரை சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள்,சிறுமிக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது?குர்ஷிதாவை சுட்டதன் நோக்கம் என்ன? தன்னை வன்கொடுமை செய்தவரின்தாயார் என்பதன் காரணமாகத்தான் சிறுமி அவரை சுட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற நோக்கில் விசாரணை நடைபெறுவதாகக் கூறினர். சிறுமி சுட்டதால் குர்ஷிதாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)