/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/676_5.jpg)
நடனமாட மறுத்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் பகுவரா என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்த 10 வயது சிறுமியை தங்களுடன் நடனமாட வற்புறுத்தியுள்ளனர்.
சிறுமி மற்றும் அவரது தோழிகள் இதற்கு மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறுநாள் காலை அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் பொழுது, அவரை சாலையில் இழுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.
தீ வேகமாகப் பரவியதால் அச்சிறுமி அலறித் துடித்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியைக் காப்பாற்ற அங்கு ஓடியுள்ளனர். தீ வைத்த இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.தப்பியோடிய இளைஞர்களை காவல்துறையினர்தீவிரமாகத்தேடி வருகின்றனர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)