ப

Advertisment

பெண் ஒருவர் விவாகரத்து பெற்றதைப் பார்ட்டி வைத்துக் கொண்டாடிய சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.டெல்லியைச் சேர்ந்த சோனியா குப்தா என்ற பெண்ணுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவருடன் திருமணமான புதிதில் இருந்தே இருவருக்குமிடையேஅடிக்கடி மனக்கசப்பு இருந்துவந்தது. இதனால் சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்துவந்தார்கள். இதற்கிடையே அந்தப் பெண் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார்.

இந்த நிலையில், எவ்வளவு காலம் இப்படியே இருப்பாய் என நண்பர்கள் கூறியதால், கணவரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்துவிட முடிவு செய்து விவாகரத்து கோரி சில ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த அவர், நண்பர்களை அழைத்துப் பார்ட்டி வைத்தார். அப்போது தனது உடலில் ‘ஃபைனலி டைவர்ஸ்டு’ என்ற வாக்கியம் கொண்ட பேனரை அணிந்து கேக் வெட்டினார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதைப் போன்று உணர்வதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். இந்த சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.