/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gang rape.jpg)
ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரிலுள்ள கரோஹஸ்த்ரா ஆற்றுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஒரு சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான் தெரியவந்துள்ளது அச்சிறுமி கடுமையாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அச்சிறுமியிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், சுமார் 28 நாட்களுக்கு முன்பு அச்சிறுமி கடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தினமும் அந்த சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் சிறுமி கடத்தப்பட்ட நாள் அன்று அவரது உறவினர் ஒருவர் வீட்டிலிருந்து அவரை அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் உறவினர் உள்பட இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)