The girl was incident by 4 people in maharashtra

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது நிரம்பாத சிறுமி; இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த கல்லூரியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, இந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுமிக்கு, சமூக வலைத்தளம் மூலம் ஒருவருக்கொருவர் அறியாத 4 ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 4 பேரிடமும், இந்த சிறுமி சமூக வலைத்தளத்தில் நண்பராக பழகி வந்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று 4 பேரும், தனித்தனியாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்கள் காவலில் வைத்தும், மீதமுள்ள 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.