இன்றைய நவீன காலகட்டத்தில் விஞ்ஞானம் அதீத வளர்ச்சி அடைந்த இந்த நிலையிலும் சில பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, மறுமணம். ஆண்களுக்கு அதில் பெரிய சிரமம் இல்லாமல் நடைபெறும் மறுமணம் என்பது பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் தன்னுடைய 50 வயது தாய்க்கு துணை வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டக் கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா தன்னுடைய ட்விட்டரில்,என்னுடைய அம்மாவிற்கு 50 வயதுடைய அழகான ஆண் துணையை தேடுகிறோம். வெஜிடேரியன், குடிப்பழக்கம் இல்லாதவர், எல்லோருக்கும் தெரிந்தவர் ஆக அவர் இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு சமூகவலை தளங்களில் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow Us