Advertisment

திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் மீது ஆசிட் அடித்த காதலி!

உத்திரபிரதேசத்தில் மாநிலம் ஆக்ராவுக்கு அருகில் அலிகாரில் ஜீவங்கர் பகுதியில் 19 வயதான பெண் அவரது காதலன் மீது ஆசிட் வீசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் மீது 326ஏ பிரிவின் கீழ் கவார்ஸி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் தாயார் இதுபற்றி கூறும்போது, " அந்தப் பெண்ணும் எனது மகனும் காதலித்து வந்தனர்.

Advertisment

ஒரு மாதத்துக்கு முன்னால் அவளுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டான். ஆனால் அந்தப் பெண் அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாள். தினமும் போன் மூலம் அவனை துன்புறுத்தி வந்தாள். வியாழக் கிழமை காலையிலும் அவளது போனுக்கு அவன் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் அவன் நின்று கொண்டிருக்கும்போது அவள் ஆசீட் வீசியுள்ளாள் " என்று தெரிவித்தார். ஆசிட் வீசியதில் அந்த இளைஞருக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கும் கைகளில் காயம் இருந்துள்ளது. போலீஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

acid
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe