Skip to main content

ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியரால் மாணவி பலாத்காரம் !

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் (Rashtrapati Bhavan )பணியாற்றும் நிஷாந்த் யாதவ் என்ற ஊழியரால் டெல்லி பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த M.Sc பயிலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக டெல்லி வடக்கு அவென்யூ காவல் துறை முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்தது. இதில் ராஷ்டிரபதி பவன் ஊழியரான நிஷாந்த் யாதவ் என்பவர் ராஷ்டிரபதி பவன் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் செவ்வாய் கிழமை (09/04/2019) அன்று  கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 

Rashtrapati Bhavan



இதனால் ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்ந்து வரும் நிலையில் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியரால் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத்தலைவர் வசிக்கும் பகுதியிலேயே ஊழியரின் பாலியல் அத்துமீறல் அரங்கேறியிருப்பது இந்தியாவில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்வி குறியை ஏற்படுத்துக்கிறது. 

அதே போல் தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் எப்போதும் தீவிர கண்காணிப்பில் உள்ள டெல்லியில் இத்தகைய சம்பவம் அரங்கேறி இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா விரைவில் இணையும் என்றால் எவராலும் மறுக்க முடியாது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் , பத்திரிக்கையாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியுடன் இருந்த ஆண் நண்பர் கொலை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 husband who incident the male friend who was with his wife

கன்னியாகுமரி மாவட்டம் மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சமீர்(34) - ஜெனிபா ஆல்பர்ட்(26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் மீன்பிடித் தொழிலாளி. அதனால் அடிக்கடி மீன்பிடிக்கச் சென்றுவிடுவார்.

இந்த நிலையில், கண்ணாகம் பகுதியில் உள்ள கோழிக்கடையில் வேலை பார்க்கும் ஆஷிக் என்பவருக்கும் ஜெனிபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சமீர் மீன் பிடிக்கச் சென்ற நேரத்தில் ஜெனிபாவும் ஆஷிக்கும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் சில சமீரின் காதுக்கு வர, மனைவி ஜெனிபாவை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி ஜெனிபா அவரது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றும் ஜெனிபா ஆஷிக்கை சந்தித்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சமீர் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக ஜெனிபாவின் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஆஷிக் படுத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அருகே மனைவி ஜெனிபா இருப்பதைக் கண்ட சமீர் ஆத்திரமடைந்து, அருகே கிடந்த கட்டையை எடுத்து ஆஷிக்கை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனால் மயக்கமடைந்து கீழே ஆஷிக் சரிந்துள்ளார். இதைப் பார்த்து சமீர் மற்றும் அவரது மனைவி ஜெனிபா இருவரும் பதற்றமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் ஆஷிக்கினை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் போட்டுவிட்டுத் திரும்பியுள்ளனர். அந்த வழியாகச் சென்ற சிலர் ஆஷிக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆஷீக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், நடந்த சம்பவத்தை கண்டுபிடித்து சமீர் மற்றும் ஜெனிபா இருவரையும் கைது செய்துள்ளனர்.