மராட்டிய மாநிலம் சோம்பி பகுதியை சேர்ந்தவர் சார்மி. இவர் அப்பகுதியில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். பொறியியல் படித்த இவர், வீட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஐடி பார்க்கில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்து தினமும் ரயில் பயணித்து அலுவலகம் சென்று வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை இவர் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ரயில் நிலையம் வந்துள்ளார். சாதாரண நாட்களில் இருப்பதை விட அதிகப்படியான கூட்டம் ரயில் நிலையத்தில் இருந்ததால் ரயில் ஏற போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. அவர் சிரமப்பட்டு ரயில் ஏறினாலும், ரயிலின் உள்ளே செல்ல முடியவில்லை. இந்நிலையில், திடீரென அருகில் இருந்தவர் அவர் மீது விழவே அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.