Advertisment

ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை சரமாரியாக தாக்கிய இளம்பெண்!

இந்தியத் தலைநகர் டெல்லி பெண்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகசமீபத்தில்தகவல் வெளியாகி அதிர்ச்சி கிளப்பியது. பெரும்பாலும் இந்தத் தாக்குதல்களில் சிக்கும் பெண்களே அதிகம் பாதிக்கப்படும் நிலையில், தன்னிடம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியில் துன்புறுத்த நினைத்த இரண்டு இளைஞர்களை கடுமையாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Advertisment

Eve

அம்பிகா சவுத்ரி எனும் இளம்பெண் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த மணீஷ் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு இளைஞர்கள் அந்தப் பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.

தொடக்கத்தில் அந்தப் பெண் பொறுமையாக இருப்பதைக் கண்ட அந்த இளைஞர் பாலியல் ரீதியில் பேசி, துன்புறுத்த முயன்றபோது ஆத்திரமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர்களை விரட்டிப் பிடித்து கடுமையாகத் தாக்கி, காவல்நிலையத்திலும் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் அந்த இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi Eve teasing
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe