ghulam nabi azad

Advertisment

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசூழலில்ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின்ஆதரவாளர்கள் 20 பேர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைவரைமாற்றக்கோரி பதவி விலகினர்.

இந்தசூழலில்சமீபகாலமாககுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த பொதுக்கூட்டங்களில் பேசுகையில் அவர், ஜம்மு காஷ்மீரின்சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குதான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதைபதிவு செய்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் அடுத்த தேர்தலில் 300 இடங்களைவெல்லும் என கருதவில்லை என தெரிவித்தார்.

Advertisment

இந்தசூழலில்குலாம் நபி ஆசாத், காங்கிரஸில்இருந்து விலகி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தனிக்கட்சி தொடங்குவார்என அகில இந்திய காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில்கட்சிக்கு தனது முக்கியத்துவத்தை காட்டுவதற்காகவே அவர் இவ்வாறு நடந்துகொள்ளவதாகவும்கூறப்படுகிறது.இதனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.