Advertisment

'குழப்பத்தை ஏற்படுத்துகிறார் கார்கே'- கண்டனத்தை வீசிய தேர்தல் ஆணையம்!

'Gharke is causing confusion' - Election Commission condemned

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

Advertisment

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களைகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கார்கே கருத்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு பற்றிய அடிப்படை ஆதாரமற்றகருத்துக்களை கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்துவது மூலம் தேர்தல் நடவடிக்கைக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே செயல்படுகிறார் எனத்தேர்தல் ஆணையம் தற்போது பகிரங்கமாக தனதுகண்டனத்தை தெரிவித்துள்ளது.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe