Advertisment

'தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக...'-மக்களவையில் கொந்தளிப்பு!

Get the Governor of Tamil Nadu back... DMK in Lok Sabha!

Advertisment

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக விரைவாகத் தீர்வுகாண வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். மசோதா திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்களைப் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். 'தமிழக உரிமையைப் பறிக்காதே' எனஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுக உள்ளிட்ட எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். ஆளுநர் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழ்நாடு எம்.பிக்கள் மக்களவையில்வலியுறுத்தியதோடு வெளிநடப்பும் செய்துள்ளனர்.

parliment governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe