ADVERTISEMENT

புதிய வகை கரோனா பரவல்... மரபணு வரிசைமுறை சோதனை! - மத்திய அரசு அறிவிப்பு!

05:48 PM Dec 29, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ், இங்கிலாந்திலிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவி வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவிலும் புதியவகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 6 பேருக்கு புதியவகை கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு, "கடந்த 14 நாட்களில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், புதியவகை கரோனா தொற்றா? எனக் கண்டறியும் வண்ணம், அவர்களுக்கு மரபணு வரிசைமுறை பரிசோதனை நடத்தப்படும்" என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT