gautam gambhir

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக கிழக்கு டெல்லி தொகுதியில் நின்று வெற்றிபெற்ற அவர், அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளைவெளியிட்டுவருகிறார்.

Advertisment

இந்தநிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக டெல்லி காவல்துறையிடம்கவுதம் கம்பீர் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கவுதம் கம்பீர் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisment