பாஜக வில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரர்... டெல்லியில் போட்டி..?

gambhir joins bjp

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தங்கள் வேட்பாளர்கள் தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நினையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லியில் போட்டியிடலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் அவர் இன்று பாஜக வில் இணைந்தார்.

Gautam Gambir loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe