Skip to main content

கம்பீர் அறக்கட்டளை மீது தாமதமின்றி நடவடிக்கை - தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் தகவல்!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

gautam gambHir

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேநேரத்தில், டெல்லியிலுள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு மருந்துகளை அளித்து உதவி செய்தனர். இதில் சிலர் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளைப் பதுக்குவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மருந்துகளைப் பதுங்குவது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

இதில், மற்ற அரசியல்வாதிகளைப் போல பாஜக எம்.பி-யான கம்பீரும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை விநியோகித்து வந்தார். இந்நிலையில், தொற்றுநோய் காலத்தில் மருந்துகளைப் பதுக்கியதாகக் கம்பீர் உட்பட மூவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருந்து பதுக்கல் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கம்பீரிடம் விசாரிக்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டனர். 

 

இந்தநிலையில் இன்று தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கம்பீர் அறக்கட்டளை, ஃபேபிஃப்ளூ அனுமதியின்றி கொள்முதல் செய்து, சேமித்து உரிய அனுமதியின்றி விநியோகித்ததாகவும், இதற்காக கம்பீர் அறக்கட்டளை மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

 

இதற்கு முன்பு கம்பீர் அறக்கட்டளை மருந்துகள் விநியோகித்தததில் எந்த தவறும்  இல்லை என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் சமர்ப்பித்த அறிக்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. வழக்கு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Aam Aadmi MP's case against enforcement department

 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

 

அதே சமயம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

 

இந்நிலையில் சஞ்சய் சிங் எம்.பி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றம் தன்னைக் காவலில் வைக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

 

Next Story

ஜெயிலர் படத்தில் சில காட்சிகளை நீக்குக - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

jailer movie rcb jersey issue

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.525 கோடி வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ரூ.600 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இப்படத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியின் ஜெர்ஸியை குணச்சித்திர நடிகர்கள் அணிந்து வரும் காட்சியில், பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஒருவர் சில கருத்துக்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனால் தங்கள் அணிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அக்காட்சி அமைந்துள்ளதாகவும் அணியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்சிபி அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கு நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும். மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.