மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியும் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சந்தித்து பேசினர். மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது என கூறப்பட்டாலும், அச்சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை எற்படுத்தியது.
இந்த நிலையில் கெளதம் அதானியின் மகனான கரண் அதானி, நேற்று மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பின்போது தாஜ்பூரில் ஆழ்கடல் துறைமுகத்தை நிர்மாணிப்பது பற்றிய விவாதம் நடைபெற்றதாகவும், தியோச்சா-பச்சாமி நிலக்கரி சுரங்கத் திட்டம் ஆலோசனை நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இந்த சந்திப்பும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை எற்படுதியுள்ளது.