Advertisment

ஒருவருட காலமாக அசுர வளர்ச்சி: ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக மாறிய அதானி!

gautam adani

இந்தியாவின் பெரும்பணக்காரரானமுகேஷ் அம்பானி, ஆசியா அளவிலும்முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், இந்தியாவில் அம்பானிக்கு அடுத்த பெரும்பணக்காரராக இருந்துவந்த அதானி, ஆசியஅளவிலும் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சீனபணக்காரர் ஜோங்ஷான்ஷானை பின்னுக்குத் தள்ளி, அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

உலக அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானியும் அதானியும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். அம்பானி 13வது இடத்திலும், அதானி 14வது இடத்திலும் உள்ளனர். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டுமட்டும் 32 பில்லியன்டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், முகேஷ் அம்பானி இந்த வருடத்தில் மட்டும் 175.5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதனைபுளூம்பர்க் இதழ் தெரிவித்துள்ளது.

Advertisment

கரோனாபாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அதானியின் நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்தவருடத்தில் மட்டும்அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகளின் விலை 1,145% வரை அதிகரித்துள்ளது, அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவன பங்குகளின் விலை827% வரையும், அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனப் பங்குகளின்விலை 615% வரையும், அதானி க்ரீன் எனெர்ஜிநிறுவனப் பங்குகளின் விலை 435% வரையும், அதானி பவர் நிறுவனம் தோராயமாக 189 % வரையும்வளர்ச்சி அடைந்துள்ளன.

WORLD BILLIONAIRES mukesh ambani Adani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe