Skip to main content

சிலிண்டர் விலை மீண்டும் ஏற்றம்...

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

ghjghjhg

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் வரி உயர்வின் காரணமாக தற்போது சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட ஒரு மானிய சிலிண்டரின் விலை ரூ.2.08 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மானியம் இல்லாத சமையல் சிலிண்டரின் விலை ரூ.42.50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வருடத்திற்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Two free cylinders per year for people..

 

குஜராத்தில் மக்களுக்கு இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

குஜராத்தில் விரைவில் சட்டபேரவைத் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீட்டு வகானி தெரிவித்தார். 

 

தீபாவளி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி பிரதமரின் உத்வாலா யோஜனா  திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் 38 லட்சம் மக்கள் ஓராண்டுக்கு இரண்டு சிலிண்டர்களை பெற்று பயனடைவார்கள் என கூறப்படுகிறது. சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி மீதான வாட் வரியில் 10% குறைக்கப்படும் எனவும் குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து அமைச்சர் ஜீட்டு வகானி கூறுகையில் மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 650 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

உணவகங்களில் விலை உயர வாய்ப்பு; வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

lpg cylinder

 

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

 

இந்த சூழலில் கடந்த மாதம், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையில் 266 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் 100.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக டெல்லியில் 19 கிலோ வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலை, 2000.50 ரூபாயிலிருந்து 2,101 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் 19 கிலோ வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலையில் 101.50 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 2133 ரூபாய்க்கு விற்கப்பட்ட வர்த்தக ரீதியிலான சிலிண்டர் தற்போது 2134.40 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்த விலை உயர்வின் காரணமாக, உணவகங்களில் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.