Advertisment

7 வயது சிறுவனுடன் சேர்ந்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல்; சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

 A gang tried to rob an ATM along with a 7-year-old boy; The CCTV footage is shocking

Advertisment

7 வயது சிறுவனுடன் சேர்ந்து முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவின் திருவூரு இடத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் கடந்த 26ம் தேதி சில நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையடிக்க முயன்றனர். உள்ளே இருந்த ஏடிஎம் லாக்கரை உடைக்க முயன்ற போது முடியாததால் அந்த கும்பல் பணத்தை எடுக்காமலே சென்றுவிட்டது. அந்த நேரத்தில் உள்ளே பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அந்த கொள்ளையர்களுடன் ஏழு வயது சிறுவன் ஒருவனும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில் ஏடிஎம் மெஷினின் லாக்கரை உடைத்தபொழுது அலாரம் அடித்ததால் கொள்ளையடிக்க முயன்றவர்கள் பயந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். அவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

police ATM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe