Advertisment

பழங்குடியின பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற கொடூர கும்பல்!

A gang stripped a tribal woman and dragged her in a procession

Advertisment

பழங்குடியின பெண்ணை ஆடைகளை அவிழ்த்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், தாஹோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர், வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண், தனது ஆண் நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த பெண்ணின் மாமனார் பகதூர் தாமோர், கணவரின் சகோதரர் சஞ்சய் தாமோர் மற்றும் சில பெண்கள் உள்பட்ட கும்பல், கடந்த 29ஆம் தேதி அந்த நபரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணை மோட்டார் சைக்களில் கட்டிவிட்டு சாலையில் இழுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisment

அங்கு வைத்து, பெண்ணின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கைகளை சங்கிலியால் கட்டி ஊர்வலமாக கிராமம் முழுக்க இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பழங்குடியின பெண்ணை கொடூரமாகத்தாக்கிய 15 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident Tribal Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe