/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22_123.jpg)
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் புனேவில் நேற்று இரவு இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு தனது ஆண் நண்பருடன் 21 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணுடன் வந்த ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம்பெண்ணை இழுத்துச் சென்ற அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதன்பிறகு அங்கிருந்து மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 பேர் கொண்ட தனிக் குழு அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Follow Us