Tara Gandhi

Advertisment

மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்றுவிவசாயிகள் நடத்தியட்ராக்டர்பேரணி, சிங்கு எல்லையில் கலவரம்ஆகியவற்றைத் தாண்டி விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும்வரை, வீடு திரும்ப்போவதில்லை என்ற முடிவில்போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சர்ஜி, டெல்லியின் காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து, விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், “நீங்கள் போராடுவதற்கான காரணத்தில் நிறைய உண்மை இருக்கிறது. நான் சத்தியத்துடன் இருக்கிறேன்;எப்போதும் அதனுடன் நிற்பேன்”எனத் தெரிவித்துள்ளார்.

farmers candle march

Advertisment

புல்வாமாதாக்குதல் நடந்த இரண்டாம்ஆண்டு நினைவு தினம் நேற்று (14.02.2021) கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அத்தாக்குதலில் வீரமரணமடைந்த இராணுவவீரர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி, பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.