ஒடிசா மாநில பள்ளிகளில் அம்மாநில அரசு ஆமா பாபுஜி என்ற 2 பக்க கையேட்டை வழங்கி உள்ளது. அந்த கையேட்டில் மகாத்மா காந்தி மரணம் குறித்து தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மகாத்மா காந்தி தற்செயலான ஒரு விபத்து மூலம் மரணம் அடைந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டதன் விளைவால் காந்தி இறந்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆனால் அதற்கு மாறாக தற்செயலான ஒரு விபத்து மூலம் மகாத்மா காந்தி மரணமடைந்தார் எனக் கூறியுள்ள இந்தக் கையேடு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இது ஒரு மன்னிக்க முடியாத தவறு இதற்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆகவே ஒடிசா நவீன் பட்நாயக் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நரசிங்ஹ மிஸ்ரா தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த கையேட்டை அரசு திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.