Advertisment

ககன்யான் திட்டத்தில் கரோனா ஏற்படுத்திய பின்னடைவு!

isro sivan

இஸ்ரோ விஞ்ஞானிகள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ககன்யான் திட்டமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இத்திட்டத்தை வருகிற 2022-ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 விண்வெளி வீரர்களில் இருந்து 4 வீரர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ரஷ்யாவில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் ஏற்படுத்திய முடக்கம் காரணமாக இத்திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறியுள்ளார்.

Advertisment

"இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேலான விஞ்ஞானிகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே திட்டமிட்ட தேதியில் இருந்து சற்று தாமதமாகலாம்" எனக் கூறினார்.

ISRO Sivan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe