Advertisment

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்; பாராசூட் சோதனையை முடித்த இஸ்ரோ

nn

இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த பல்வேறு கட்டங்களைத்தாண்டி தற்பொழுது நிலவின் சுற்று வட்டப்பாதையில் உயரம் குறைக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதே நேரம் கனவுத்திட்டமான விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாராசூட் இறக்கும் சோதனை சண்டிகரில் வெற்றி கரமாக நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்த திட்டம் 2024 இறுதியில் செயல்படுத்தப்படும். இதற்கான தீவிரப் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் ஆய்வகத்தில் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சின் சோதனை நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்ட்டிக் ஆய்வகத்தில் ரயில் பாதையில் ராக்கெட் பிளேட் எனப்படும் ஒரு சோதனை தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ளது. இதனை பாராசூட் சோதனை என்று கூறுகின்றனர். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்த திட்டத்தில் விண்கலம் மீண்டும் பூமியில் தரை இறங்கும்போது வீரர்களை பத்திரமாக இறக்குவதற்கான பாராசூட் சோதனை நடத்தப்பட்டது. 5.2 மீட்டர் நீளம் கொண்ட பாராசூட் ரயில் தண்டவாளத்தில் உள்ள என்ஜினில் பொருத்தப்பட்டு வேகமாக நீக்கப்பட்டது. அதிவேகத்தில் பாராசூட் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது தொடர்பான சோதனை நடைபெற்றது. இச்சோதனை கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளதாகஇஸ்ரோதெரிவித்துள்ளது.

Advertisment

chandigarh Space ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe