Advertisment

ஜி20 உச்சி மாநாடு; சர்வதேச தலைவர்கள் டெல்லி வருகை

G20 Summit International leaders visit Delhi

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் நண்பகல் 12.35 மணியளவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டெல்லி வருகிறார். அதேபோல் பிற்பகல் 01.40 மணியளவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லி வருகிறார். பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு முதல் முறையாகடெல்லி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக ஜோ பைடன் டெல்லி வருகிறார். மேலும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலாவால், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டிலியனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர். டெல்லிக்கு வருகை புரிந்த சர்வதேச தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe