Advertisment

ஜி 20 உச்சி மாநாடு; டெல்லியில் குடிசைகள் மறைப்பு

G20 Summit Covering of slums in Delhi

ஜி - 20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜி - 20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் தங்கும் விடுதிகள் வரை சாலையோரம் உள்ள குடிசைப் பகுதிகளை பச்சை நிற திரைச் சீலைகள், விளம்பரப் பதாகைகளைக் கொண்டு மத்திய அரசு மூடியுள்ளதுசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்த போது இதேபோன்று குடிசைப் பகுதிகள் திரைச் சீலைகளைக் கொண்டு மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe