Advertisment

ஜி 20 மாநாடு; 160 விமானங்கள் ரத்து

G20 Conference 160 flights cancelled

Advertisment

டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு 160 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் டெல்லி விமான நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு 160 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தரும் 80 விமானங்களும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 80 விமானங்களின் பயண சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு சர்வதேச விமான சேவையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், நாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

flight airport Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe