Advertisment

'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி'-தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

 'Tamil Nadu will get funds only if new education policy is adopted' - Dharmendra Pradhan's plan

'தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழகத்திற்கான நிதிகளை கொடுப்பதில்லை. குறிப்பாக பேரிடர் நிவாரண நிதி, கல்விக்கான நிதிகளை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது' என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், 'ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் ரூபாய் 2,401 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடி அதேபோல், 2024-2025 ஆம் ஆண்டுக்கான தவணைத் தொகை 2,152 கோடி ரூபாய் என தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்ட கூறுகளை நிறைவேற்ற மத்திய அரசு நிதி தரவில்லை.

Advertisment

திட்ட ஏற்பளிப்பு குழு அங்கீகரித்த மத்திய அரசின் 60 சதவீத பங்கான ரூபாய் 2,152 கோடி இதுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 17,632 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது' என தெரிவித்திருந்தார்.

 'Tamil Nadu will get funds only if new education policy is adopted' - Dharmendra Pradhan's plan

இந்நிலையில் 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ''தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயை தர சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா? ஏற்றால் தான் நிதி'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tamilnadu education
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe