Advertisment

கோவாக்சின், கோவிஷீல்டுக்கு முழு சந்தை அங்கீகாரம்!

covid vaccines

சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட்தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும்கடந்தாண்டு தொடக்கத்தில் அவசரகால அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகஇரண்டு தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில்கோவிஷீல்ட்மற்றும்கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் கேட்டு அத்தடுப்பூசிகளைத் தயாரித்திருந்த நிறுவனங்கள் அண்மையில் விண்ணப்பித்தன. அதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு,கோவிஷீல்ட்மற்றும்கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரைத்தது.

Advertisment

அதனைத்தொடர்ந்துதற்போது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், கோவிஷீல்ட் மற்றும்கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு நிபந்தனைகளுடன் முழுமையான சந்தை அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த ஒப்புதலால், மருந்து கடைகளில் இத்தடுப்பூசிகள் விற்பனைக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில்தனியார் மருத்துவமனைகள் தேவையான தடுப்பூசிகளைவாங்கி மக்களுக்கு செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தயாரிக்கப்படும்கோவிஷீல்ட்மற்றும்கோவாக்சின் தடுப்பூசிகளில் 25 சதவீத தடுப்பூசிகளை வாங்குவதற்கு மட்டுமே தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

DCGI covaxin covishield
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe