நோயாளி உடலில் பழச்சாறு செலுத்திய விவகாரம் - மருத்துவமனை தரைமட்டமாக்கப்படும் என எச்சரிக்கை

ரதக

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மாவுக்குபதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனை இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு உடனடியாக பிளாஸ்மா செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு பிளாஸ்மா ஏற்றப்பட்டது. பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அந்த நபர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிளாஸ்மாவுக்குப் பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், அம்மாநில துணை முதல்வரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டுச்சென்றனர்.

இந்நிலையில் அந்த மருத்துவமனை அனுமதியின்றி செயல்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டு சில நாட்களுக்குமுன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவமனை தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில் விரைவில் மருத்துவமனை இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

hospital uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe