Friends who lost his lives youth for Anger at not being given a password

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபி தாஸ்(18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பாபி தாஸ், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த பாபி தாஸின் பெற்றொர், அந்த பகுதியை சுற்றி பல இடத்தில் தேடி வந்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் பாபி தாஸ் கிடைக்காததால், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

Advertisment

அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், முர்ஷிதாபாத் பகுதி அருகே உள்ள வனப்பகுதியில், எரிந்த நிலையில் ஒரு மனித உடல் இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது, உயிரிழந்தது பாபி தாஸ் என்பது தெரியவந்தது.

Advertisment

இதனை தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பாபிதாஸின் நண்பர்களான 4 பேரிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செல்போனில் விளையாடும் பிரி பையர் என்ற ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பாபி தாஸிடம், நண்பர்கள் 4 பேர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மறுத்ததால் அவரை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.