Advertisment

விபத்தில் உயிரிழந்த உயிர் நண்பன்; அதே இடத்தில் இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

A friend who lose in live in an accident; A pathetic decision taken by the youth at the same place

உடன் வந்த உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்த இளைஞர் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர்-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது நல்கிடா என்ற பகுதி. அங்கு சாலை ஓரத்திலிருந்த மரத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அருகில் இருந்த ராஜ்கட் காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் ஜபூவா மாவட்டத்தைச் சேர்ந்த கண்டிசிங் என தெரிய வந்தது. அவருடைய மொபைல் போனை எடுத்து ஆராய்ந்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டி சிங் அவருடைய நண்பர் நௌசிங் உடன் இந்தூர்-அகமதாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்புறம் வந்தஇரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நௌசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்னுடைய உயர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததைத் தாங்க முடியாத கண்டி சிங் அதே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Friend police MadhyaPradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe