Advertisment

போராடும் விவசாயிகளுக்கு 'வை-ஃபை' வழங்கும் அரசு!

arvind kejriwal

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், 34வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. விவசாயிகள் பெருமளவில் டெல்லி எல்லைப்பகுதிகளில் முகாமிட்டு,போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், டெல்லியின்சிங்குஎல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு இலவசவை-ஃபைவழங்க, டெல்லிமாநிலஅரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மிகட்சி, "விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பில்இருக்கும் வண்ணம் அவர்களுக்கு, வை-ஃபைவழங்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கட்சியும் முடிவெடுத்துள்ளது. நாங்கள் வை-ஃபைஹாட்ஸ்பாட்டை நிறுவ சிலஇடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தேவைப்பட்டால், வை-ஃபைஹாட்ஸ்பாட் மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, விவசாயச் சட்டங்களுக்குஎதிராகவும் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Aravind Kejriwal Farmers Protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe