ராஜஸ்தான் மாநிலத்தில் 1 கோடியே 33 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது, டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அப்போது, சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 33 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கப்பட இருப்பதாக கூறினார். ஸ்மார்ட் ஃபோன்களுடன் இலவசமாக இன்டர்நெட் வசதியும் இலவசமாக செய்திக் கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.