Advertisment

ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் - வாக்குறுதிகளால் அலறவிடும் கட்சிகள்

லரக

Advertisment

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்றது. குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி, தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரதமர் மோடி, சமீபத்தில் தேர்தலில் இலவசங்கள் குறித்துப் பேசிய போது "இந்திய அரசியலிலிருந்து இலவசத் திட்டக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு குஜராத்தேர்தல் அறிக்கையைவெளியிட்டிருந்த அம்மாநில பாஜக, இலவச ஸ்கூட்டர், சைக்கிள், கேஸ் சிலிண்டர் என பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவோம்” என்று உறுதியளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe