குழந்தையில்லா பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்; நூதன முறையில் மோசடி செய்த கும்பல்!

fraud gang cheat to 10 lakhs if make Childless get pregnant in bihar

பெண்களை கர்ப்பமாக்கினால் பணம் தரப்படும் என்று நூதன முறையில் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி குறித்து பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தின் கஹுவாரா கிராமத்தில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ், போலா குமார் மற்றும் ராகுல் குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ‘ஆல் இந்தியா பிரக்னெண்ட் ஜாப் சர்வீஸ்’ என்ற குரூப்பை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உருவாக்கி வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை இந்த மோசடி கும்பல் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினல் ரூ.10 லட்சம் தரப்படும் என்றும், ஒருவேளை அந்த பெண்கள் கர்ப்பமாகாவிட்டால் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பிய பலர், அந்த கும்பலிடம் பேசி இது குறித்த தகவலைப் பெறுகின்றனர். அவர்கள் பேச்சிய நம்பிய அவர்களிடம் இருந்து, பான் கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவற்றை கேட்டுப் பெற்றும், முன்பதிவு கட்டணம், ஹோட்டல் அறை கட்டணம் என்று கேட்டும் பணம் பறித்துள்ளனர். தாம் ஏமாந்ததை உணர்ந்த அவர்களிடம், அவர்களுடைய செல்பி புகைப்படத்தை வைத்து மிரட்டி வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar fraud Pregnant
இதையும் படியுங்கள்
Subscribe