Skip to main content

பிஷப் பிராங்கோ கவல்துறையில் ஆஜர்....

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
frango


கேரள கன்னியாஸ்திரிகள் 13 பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் பாதிரியார் பிராங்கோ முலக்கல், இன்று காலை கொச்சி காவல்துறையினரிடம் ஆஜராகினார். இந்த விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நடத்தி வருகிறது.
 

பிராங்கோ காவல்துறையினரிடம் ஆஜராகினால், கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று கேரள உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வருகின்ற 26ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார் பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன்....

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
case


கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஃப்ராங்கோ. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக  இவரின் மீது அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பாதிரியார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வாட்டிக்கனும் இவரின் மீது நடவடிக்கை எடுத்து இவரின் பொறுப்பிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

பாலியல் புகார் பாதிரியார் மீண்டும் சிறையில் அடைப்பு!!!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
pastoral


கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இவரின் மனு நேற்று மதியம் 1:45 மணிக்கு விசாரணை செய்வதாக இருந்தது.
 

ஆனால், பாதிரியார் பிராங்கோவுக்கு கொடுக்கப்பட்ட போலிஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவை ஆஜர் செய்தனர். பின்னர், கோட்டயம் நீதிமன்றம் பாதிரியார் பிராங்கோவை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பலா கிளைச்சிலையில் பாதிரியார் பிராங்கோ அடைக்கப்பட்டார்.
 

இதனிடையே ஜாமீன் கோரி பிராங்கோ தாக்கல் செய்த மனுவை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளி வைத்தது.