style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஃபிராங்கோ மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர், காவல்துறை அவர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்தது. வாடிகன், அவரை பேராயர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. பிணையில் வெளிவந்த ஃபிராங்கோ கேரளா திரும்ப முயன்றபோது எதிர்த்தவர்களில் முக்கியமானவர் குரியகோஸ் காட்டுத்தரா. இன்று காலை அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ், அவருக்கு வயது 60. அவர் தங்கியிருந்த சர்ச்சின் அறையில், இன்று காலை அவர் இறந்துகிடந்தார். அவரின் இறப்பிற்கு சரியான காரணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவர் இறப்பில் மர்மமுள்ளது, இதற்கு பின் பெரிய சதி இருக்கிறது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலநாட்களுக்கு முன்பு மாத்ரூபூமி இதழுக்கு அளித்த பேட்டியில், ஃபிராங்கோவுக்கு எதிராக பேசக்கூடாது என எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவருக்கு எதிராக பேசினால் என்னென்ன ஆகும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் முக்கிய சாட்சியாக பார்க்கப்பட்ட இவர்மரணமுற்றதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே என்ன காரணம் என சொல்லமுடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.