இந்தியாவிற்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக வந்துள்ள பிரான்ஸ் நாட்டுஅதிபர் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லிவந்தடைந்தார். பிரான்ஸ் அதிபரை நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார்.

Advertisment

france president

இந்தியாவிற்கு நான்கு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேரி நேற்றிரவு விமானம் மூலம் டெல்லிக்குவந்தனர். அவர்களை நேரில் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த பயணத்தில்இரு நாடுகளுக்குமிடையேயானபாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றபல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

மேக்ரோனை வரவேற்ற பிறகு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்"அதிபர் இம்மானுவல் மேக்ரோன் அவர்களே, இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்களின் இந்திய வருகை இந்தியா பிரான்ஸ் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். உங்களிடம் நாளை உரையாட காத்துள்ளேன்". என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதற்கு முன்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்தியா வந்தபொழுது நேரில் சென்று இந்திய பிரதமர் மோடி வரவேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏழு நாட்கள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த ட்ருடோவை ஐந்தாவது நாள்தான் மோடி சந்தித்தார். அவரை சந்திப்பதற்குமுந்தையநாள்தான் டுவிட்டரில் அவரை வரவேற்கும் வண்ணம் டுவிட் செய்தார். மோடி ஜஸ்டின் ட்ரூடோவைசந்திக்கும் வரையில் மோடியின் மீது பல விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.