map

சென்னையில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய தெலுங்கானாவை சேர்ந்த நான்கு திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து தெலுங்கானா போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கானாவை சேர்ந்த இவர்கள் நால்வரும் சென்னையில் வாடகை கார் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். பகல் நேரங்களில் ஓட்டுனர் பணி புரியும்போது பணக்காரர்கள் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு இரவு நேரங்களில் அங்கு சென்று திருடி வந்துள்ளனர். சரியான இடங்களுக்கு செல்லவும், அங்கிருந்து எளிதில் தப்பிக்கவும் கூகிள் மேப் உதவியுடன் இவர்கள் திருடியுள்ளனர். தெலுங்கானாவிலிருந்து இவர்களை சென்னை கொண்டு வந்து விசாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment