தொடர் மழையின் காரணமாக மும்பை டோங்ரி பகுதியிலுள்ள நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உள்ளே சிக்கியுள்ள 40 பேரில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அண்மையில்மும்பையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிற நிலையில் தற்போது டோங்ரி பகுதியில் பராமரிப்பின்றி இருந்த நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில்இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் போலீசார், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்புபணியில் இறங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் பலர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று கணிக்கமுடியதாக சூழலே நிலவுவதாக தகவல்கள் வந்துள்ளன.