கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு மாவோயிஸ்டுகள் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

Advertisment

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகட்டி என்ற இடத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுரேஷ், கார்த்திக், ஸ்ரீமதி, மணிவாசகம் என்னும் நால்வர் உடல்களை கைப்பற்றிய அதிரடிப்படை போலீசார் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்தநிலையில் அவர்களுடைய உடற்கூறாய்வு இன்று நடைபெறுகிறது. அவர்களது உடலை கேட்டு கேரள போலீசாரிடம் உறவினர்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்தநிலையில் தப்பிய சந்து மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் கேரள தண்டர்போல்ட் போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு உள்ளிட்டோர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.