ADVERTISEMENT

நால்வர் உயிரிழப்பு - அமித்ஷாவை சாடிய மம்தா பானர்ஜி!

07:18 PM Apr 10, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், நான்காவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.


இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டம் மாதபங்காவில், வன்முறை நிகழ்ந்தது. இதில் முதல்முறை வாக்காளர் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் தான், நால்வரையும் சுட்டுக்கொன்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்த நிலையில், நால்வரின் உயிரிழப்புக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே காரணம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய படை வீரர்கள் அமித்ஷாவின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT