Advertisment

சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சி.ஆர்.பி.எப் வீரர்; நான்கு பேர் பலி - சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

chhattisgarh

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) 50வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், சத்தீஸ்கர் மாநிலம்சுக்மா மாவட்டத்தில் முகாமிட்டுத்தங்கியிருந்தனர். இந்தநிலையில்இன்று அதிகாலை 3.15 மணியளவில் சி.ஆர்.பி.எப் கான்ஸ்டபிள் ரீதேஷ் ரஞ்சன், தனது ஏ.கே-47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

Advertisment

இதில் 4 நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய ரீதேஷ் ரஞ்சன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கானகாரணம் இன்னும் தெரியாத நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இதற்கிடையே இந்த துயரசம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள வெளிப்படுத்தியுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத்தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

crpf chhattisgarh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe